முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலிஃபோர்னியாவில் 150 வயதான கலபகோ ஆமை மரணம்

திங்கட்கிழமை, 22 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

கலிஃபோர்னியா - கலிஃபோர்னியாவின் மிருககாட்சி சாலையில் இருந்த 150 வயதைத் தாண்டிய ராட்சத கலபாகோ ஆமை கொல்லப்பட்டது. உடல் நலப் பிரச்சனைகளால் பல ஆண்டுகளாக இந்த ஆமை அவதிப்பட்டுவந்தது. ஸ்பீட் என்ற பெயரைக் கொண்ட இந்த ஆமை, சில காலமாகவே வயிற்றுப் பிரச்சனையால் தவித்துவந்தது.

சான் டியாகோ மிருகக் காட்சி சாலையில் இருந்த இந்த ஆமைக்கு எலும்பு தேய்மான பிரச்சனை உள்ளிட்ட பல உடல் நலக் கோளாறுகள் இருந்துவந்தன.1933ஆம் ஆண்டில் ஸ்பீட் கலிஃபோர்னியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஈக்குவெடாருக்கு அருகில் உள்ள வோல்கன் செர்ரோ அஸுல் என்ற தீவிலிருந்து இந்த ஆமை கொண்டுவரப்பட்டது.

தற்போது இந்த மிருகக்காட்சி சாலையில் 13 கலபாகோ ஆமைகள் இருக்கின்றன.இந்த ஆமைகள், 90க்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சுகளைப் பொரித்திருக்கின்றன. அவை பிற மிருகக்காட்சி சாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் பல இந்த ஸ்பீட் ஆமைக்குப் பிறந்தவையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து