எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கடி தொடர்பான விசயங்களில் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
நிறுவனங்கள், சாலைகளில் இருந்து தெரு நாய்களை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மாற்றக்கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.பி. அஞ்சாரியா ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் தெரு நாய் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி விக்ரம் நாத், "கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு எதிரான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தாத மாநிலங்களிடம் ஒவ்வொரு நாய்க்கடி, நாய்க்கடியால் உயிரிழப்பு அல்லது காயம் போன்றவற்றிற்காக பெரும் இழப்பீடு கேட்கப்படும். மேலும், தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்கள் மீது பொறுப்பும் கடமையும் நிர்ணயிக்கப்படும்.
இந்த விலங்குகள் மீது உங்களுக்கு அவ்வளவு அன்பு இருந்தால், ஏன் அவற்றை உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லக்கூடாது? இந்த நாய்கள் ஏன் தெருக்களில் சுற்றித் திரிந்து, மக்களை கடித்து பயமுறுத்த வேண்டும்?. இவ்வாறு நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்தார்.
மற்றொரு நீதிபதி மேத்தா "9 வயதுச் சிறுவனை நாய்கள் தாக்கும்போது யார் பொறுப்பேற்க வேண்டும்? அந்த நாய்களுக்கு உணவளிக்கும் அமைப்பா? இந்தப் பிரச்சனையை நாங்கள் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?" என கேள்வி எழுப்பினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


