முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வா? த.வெ.க.வா? கூட்டணி முடிவை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்..!

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2026      தமிழகம்      அரசியல்
Ramadoss 2023-07-28

சென்னை, இன்று காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இதனால் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் தற்போது அன்புமணி தலைமையிலான பா.ம.க.வும் இணைந்துள்ளது.

ஆனால் ராமதாஸ், அந்த கூட்டணி செல்லாது. சட்டரீதியாகவும் இந்த கூட்டணி செல்லாது. என்னுடன் அமைக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என சமீபத்தில் நிரூபர்களிடம் கூறி இருந்தார். மேலும் பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது. தைலாபுரத்திலிருந்து தைலமும் சென்றுவிட்டது என சூசகமாக தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது போல் தெரிவித்திருந்தார். அதேபோல தமிழக வெற்றிக் கழக முக்கிய நிர்வாகிகளும் ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் மூலமாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இருந்து நேற்று மாலை 4.30 மணி அளவில் சென்னை புறப்பட்டார். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை முடித்த பிறகு இன்று காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து