முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 11 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா,  மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும் மத்திய  அரசு உதவ வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். பீகாரில் உள்ள பாட்னாவில் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஒரு சில மாநிலங்களின் வளர்ச்சியை மட்டும் வைத்துக் கொண்டு சீனாவை பொருளாதார வளர்ச்சியில் முந்த முடியாது. தற்போதைய பொருளாதார திட்டங்கள் நாடு முழுவதும் ஒரே சீனார வளர்ச்சியை கொண்டுவர வில்லை. வளர்ச்சி என்பது தனித்தனி தீவுகளாகத் தான் இங்கு உள்ளது.

இந்திய மக்கள் தொகையில் பீகாரின் பங்களிப்பு 8.2 சதவீதம். ஆனால் நாட்டின் மொத்த வளர்ச்சியில் பீகாரின் பங்களிப்பு என்பது வெறும் 2.93 சதவீதம் மட்டுமே. நாட்டின் மொத்த வளர்ச்சியில் பீகாரின் பங்களிப்பு அதன் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் 8.2 சதவீதம் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் நாட்டின் வளர்ச்சி தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. அதற்கு காரணம் நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு சில மாநிலங்களை மட்டுமே நம்பி இருப்பதுதான்.

அனைத்து மாநிலங்களும் சமமாக வளர்ச்சி அடைய வேண்டும். அப்போதுதான் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி ஏற்படும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் சுமார் 10 கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே சுமார் 85 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன. அந்த நிறுவனங்கள் தான் கடந்த 12 மாதங்களாக நாட்டின் மொத்த வளர்ச்சியை கட்டுப்படுத்தி வருகின்றனர். எனவே நாட்டின் மொத்த வளர்ச்சி ஒரே சீராக இருக்க வேண்டும் என்றால், மாநிலங்களின் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் வளர்ச்சி திட்டங்கள் நடைபெற மத்திய அரசு உதவ வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 2 weeks 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 week ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 week ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து