எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - ராமர் பாலத்துக்கு சேதமின்றி மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய சாலை, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை ராமர் பாலத்தை பாதிக்காத வகையில் மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து ஆராய தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு 6 மாற்று வழிகளை பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாமல் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்து அறிவிப்பார்.
நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1500 கோடி லாபம் ஈட்டப்பட்டு வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ரூ.2500 கோடி லாபம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தமிழகம், புதுச் சேரியை இணைந்த பக்கிங்காம் கால்வாயை மீண்டும் முக்கிய நீர்வழித்தடமாக மாற்றுவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


