எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ள இடம் குறித்து விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும், அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவது குறித்து மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும், முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, பிரதமர். நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடந்த 2014-15-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டதையும், அதுதொடர்பாக, கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி பிரதமருக்கு தாம் எழுதிய கடிதத்தில், அந்த அறிவிப்பைப் பாராட்டியதோடு, அதுபோன்றதொரு எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் நிறுவப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில், எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவுவதற்கு போதுமான இடவசதியுள்ள இடங்களாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரம், ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் மதுரை மாவட்டத்தில் தோப்பூர் ஆகிய இடங்களை தமிழக அரசு கண்டறிந்திருப்பதை தெரிவித்திருந்ததாகவும், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 2015-2016-ம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கையிலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது - அதன்படி மத்தியக் குழு ஒன்று தமிழகம் வந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி முதல், 25-ம் தேதிவரை, மேற்கண்ட 5 இடங்களையும் முழுமையாக ஆய்வு செய்தது - ஆனாலும், எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பது குறித்த இறுதி முடிவை இதுவரை தமிழக அரசுக்குத் தெரியப்படுத்தவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதென்ற உயரிய திட்டத்தினால், தமிழக மக்களுக்கு அரிய மருத்துவ வசதிகள் கிடைப்பதுடன், சிறந்த சேவையும் கிடைக்கும். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும், அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவது குறித்து மத்திய அரசு தாமதமின்றி உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரதமரை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


