முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் இயல்பு நிலை பாதிப்பு: ராஜ்யசபையில் இன்று விவாதம்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி   - காஷ்மீரில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதால்  ராஜ்யசபையில் இன்று அதுகுறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது. காஷ்மிரீல்  ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் அண்மையில் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  நிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் நேற்று ராஜ்யசபையில் எதிரொலித்தது. காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்க மத்திய அரசு தயங்குகிறது என்று ராஜ்யசபை உறுப்பினர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சீதாராம் யெச்சூரி, "போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதை தடுத்த நிறுத்த வேண்டும்' என்றார். 

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபையில் இன்று விவாதம் நடத்தப்படும் என்றார். இதன்படி இன்று ராஜ்யசபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago