எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - காஷ்மீரில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் ராஜ்யசபையில் இன்று அதுகுறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது. காஷ்மிரீல் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் அண்மையில் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் நேற்று ராஜ்யசபையில் எதிரொலித்தது. காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்க மத்திய அரசு தயங்குகிறது என்று ராஜ்யசபை உறுப்பினர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சீதாராம் யெச்சூரி, "போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதை தடுத்த நிறுத்த வேண்டும்' என்றார்.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபையில் இன்று விவாதம் நடத்தப்படும் என்றார். இதன்படி இன்று ராஜ்யசபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


