முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்கொய்தா தீவிரவாதிகள் 13 பேரை சுட்டுக் கொன்ற ஏமன் பழங்குடியினர்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

அப்யான்  - ஏமன் நாட்டின் அப்யான் மாகாணத்தில் லோதர் என்ற இடத்தை கைப்பற்ற முன்னேறிய அல்கொய்தா தீவிரவாதிகள் 13 பேரை அந்த ஊரின் வலுவான பழங்குடியினர்  சுட்டுக் கொன்றனர். முதலில் வீதி போராட்டங்களினால் பின்னடைவு கண்ட அல்கொய்தா தீவிரவாதிகள் பிறகு இரவு நேரத்தில் நகருக்குள் நுழைந்தனர். அங்கிருக்கும் மக்கள் வசிக்கும் கட்டிடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே இவர்கள் இலக்கு. ஆனால் அங்கிருக்கும் ஆயுதந்தாங்கிய பழங்குடியினரிடமிருந்து அல்கொய்தா தீவிரவாதிகள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டனர். கடும் துப்பாக்கிச் சண்டையில் அல்கொய்தா தீவிரவாதிகள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சண்டையில் அல்கொய்தா போராட முடியாமல் தெறித்து ஓடிபின்வாங்கியது.

13 பேரை இழந்த அல்கொய்தா :

அப்யான் மாகாணத்தின் 3 ஊர்களில் லோதரும் ஒன்று, இதில் அல்கொய்தா தீவிரவாதிகள்  நுழைந்தனர். ஆனால் உள்ளூர் பழங்குடியினர் கடுமையாக எச்சரித்ததனால் 2 ஊர்களிலிருந்து அஞ்சி பின்வாங்கினர் அல்கொய்தாவினர். ஆனால் லோதரைப் பிடித்து விடலாம் என்ற ஆசையில் நுழைந்தபோது ஆயுதந்தாங்கிய ஆக்ரோஷமான, சக்தி வாய்ந்த பழங்குடியினரின் எதிர்ப்புக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் 13 பேரை இழந்து திரும்பி ஓடியது. ஏமன் அரசியலில் இந்த சக்தி வாய்ந்த பழங்குடியினரின் பங்கு மிக மிக அதிகம். அரசுப் படைகளுக்கும் ஷியா போராளிகளுக்கும் மூண்ட சண்டையினால் ஏமனில் அல்கொய்தா குளிர்காய்ந்து வந்தது. இந்நிலையில் பழங்குடியினரின் நீண்ட கால எதிர்ப்பை அல்கொய்தா உடைக்க முனைந்தது, ஆனால் இம்முறையும் தோற்றுப் போனது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago