முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் முயற்சியை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் கட்சிகள்... 

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இனி 60 சதவீதம் நிதி....

இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள். 100 சதவீதம் மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம். இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது.

அழிக்கப் பார்க்கிறது... 

வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்.  பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. 

கைவிட வேண்டும்.... 

3 விவசாயச் சட்டங்கள், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள். எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து