முக்கிய செய்திகள்

தோட்டக்கலைப் பண்ணைகளில் தென்னங்கன்றுகள்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      வேளாண் பூமி
Coconut-1

Source: provided

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலை, வல்லத்திராக்கோட்டை, நாட்டு மங்கலம் என மூன்று அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் மா, கொய்யா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் பிற மாவட்ட விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது குடுமியான்மலை, வல்லத்திராக்கோட்டை, நாட்டுமங்கலம் ஆகிய மூன்று பண்ணைகளிலும் நெட்டை இரக தென்னைகன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையிலுள்ளது. ஒரு தென்னங்கன்றின் விலை ரூ.40ஃ- ஆகும். நீண்ட நிலையான வருமானம் பெற்றிட தென்னை நட்டு பயனடைய, நல்ல தரமான நெட்டை இரக தென்னைகன்றுகளை புதுக்கோட்டை மாவட்ட அரசு தோட்டக்கலைப்பண்ணைகளிடமிருந்து பெற்று நடவு செய்து பயனடையுமாறு புதுக்கோட்டை தோட்டக்கலை துணை இயக்குநர் எஸ்.அருணாச்சலம்  கேட்டுக்கொள்கிறார்.

தொடர்புக்கு: குடுமியான்மலை த.உதய்குமார் - 9786882155
வல்லத்திராக்கோட்டை ஊ.மு.குமார் - 9787433599
 நாட்டுமங்கலம்  பாலகிருஷ்ணன் -  9944229404.

இதை ஷேர் செய்திடுங்கள்: