Idhayam Matrimony

ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2025      தமிழகம்      அரசியல்
Rahul 2024-12-03

சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியபோது, ‘‘தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி என்று உறுதியான நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்து பேசியுள்ளார். ‘விஜயை சந்தித்தது கூட்டணி குறித்து பேசுவதற்காக இல்லை’ என்று பிரவீன் சக்கரவர்த்தி தெளிவுப்படுத்தி இருந்தாலும் கூட்டணி குறித்த குழப்பம் தமிழக காங்கிரஸ் கட்சியினர் இடையே நிலவுகிறது. தி.மு.க.வும் சந்தேகப் பார்வையுடனே காங்கிரஸை பார்க்கிறது.

இதுகுறித்த தகவல்கள் தொடர்ந்து தலைமைக்கு தெரிவிக்கப்பட்டும் வந்தது. அதனடிப்படையில், தமிழகம்- புதுச்சேரியை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை இன்று டெல்லியில் சந்திக்க ராகுல் காந்தி நேரம் ஒதுக்கியுள்ளார். தமிழகத்தில் இருந்து மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், அழகிரி, தங்கபாலு உள்ளிட்ட 21 பிரதிநிதிகள், புதுச்சேரியில் இருந்து காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட 15 பிரதிநிதிகள் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்’ என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து