Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இரண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2025      உலகம்
Gun 2023 04 17

சிட்னி, ஆஸ்திரேலியாவில் 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளனர். ஆஸ்திரேலியாவை உலுக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குறித்தே எனது எண்ணம் உள்ளது. அங்குள்ள காவல் அதிகாரிகளுடன் பேசி, சூழல் குறித்த தகவல்களை பெற்று வருகிறேன்.

துப்பாக்கி சூடு நடைபெற்ற இடம் அருகே உள்ள மக்கள் போலீசாரின் அறிவுறுத்தலைப் பின்பற்ற வேண்டும்” என பதிவிட்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார்? பயங்கரவாத நோக்கத்துடன் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து