முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி குட்செப்பர்டு சர்வதேச பள்ளி மாணவர்கள் சமூக பணி

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டி குட்செப்பர்டு சர்வதேச பள்ளி மாணவர்கள் சமூக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

                                     சமுதாய சேவை

ஊட்டியருகேயுள்ள முத்தோரை பாலாடா பகுதியில் செயல்பட்டு வரும் குட்செப்பர்டு சர்வதேச பள்ளி மாணவர்கள் தங்கள் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் சமுதாயத்திற்கு சேவை புரியும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பள்ளியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி கூட வளாகத்தில் கடந்த ஆண்டு முதலே இப்பள்ளியின் அருகிலுள்ள முத்தோரை சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏழை_எளிய குழந்தைகளுக்கு கல்விச்சேவையை அளித்து வருகின்றனர்.

                                     ஞாயிற்றுக்கிழமை

இங்கு அடிப்படைக் கல்வி, ஆங்கிலம், வாழ்க்கைக்கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், ஓவியம் வரைதல் போன்றவை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் கற்பித்துத்தரப்படுகிறது. மேலும் மாணவர்கள் விளையாட்டு முறையிலும், செயல்பாடுகள் வழியிலும்  கல்வி புகட்டி வருவது அப்பகுதி குழந்தைகளிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

இவர்கள் நடத்தி வரும் இச்சேவையினால் அப்பகுதி குழந்தைகளின் நடத்தையிலும், கல்வி நிலையிலும், ஆங்கில மொழி பயன்பாட்டிலும், திறன் வளர்ச்சியிலும் மேம்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகையால் இப்பணியை தொடர்ந்து செயலாற்ற குட்செப்பர்டு சர்வதேச பள்ளி மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago