முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடக்கில் சரிசெய்துவிட்டு பிரதமர் தெற்கே வரட்டும்: காங்கிரஸ் கட்சி விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2026      இந்தியா
congress-office

திருவனந்தபுரம், வட மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்துவிட்டு, தென் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கட்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கேரளத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையைக் குறிப்பிட்டுப் பேசிய காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, "பிரதமர் மோடியை கேரளத்தில் வரவேற்கிறேன். விருந்தோம்பலில் கேரளம் மிகவும் சிறந்த மாநிலம். அவருக்கு நல்ல உணவையும் கொடுப்போம். ஆனால், அவர் நினைவில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், கேரளத்தில் ஒருபோதும் பா.ஜ.க. ஆட்சி அமையாது. அவர் வந்த வழியே திரும்பிச் செல்லட்டும். 

கேரளம், தமிழ்நாட்டில் ரயில்கள் மற்றும் பல திட்டங்களைத் தொடக்கிவைக்க பிரதமர் மோடி வருகை தருகிறார். ஆனால், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் மாசடைந்த குடிநீரால் மக்கள் இறப்பதைப் பற்றி பிரதமர் மோடி பதில்கூற வேண்டும். தில்லியின் நிலையையும் பாருங்கள். தில்லியில் நகராட்சியே இல்லை; முழுவதும் மாசுபாடுதான். பா.ஜ.க. தெற்கே வருவதற்கு முன்னால், வடக்கில் உள்ள பிரச்னைகளைச் சரி செய்யட்டும்" என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து