முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சி: பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2026      இந்தியா
modi

திருவனந்தபுரம், குஜராத்தை போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை காலை (ஜன. 23) நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், முடிவுற்ற பணிகளை தொடக்கிவைத்தார். தொடர்ந்து, அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், "1987-க்கு முன்பாக பா.ஜ.க. ஒரு சிறிய கட்சியாகவே இருந்தது. அந்த சமயத்தில், செய்தித்தாள்கள் பா.ஜ.க. பற்றி இரண்டு வரிகள்கூட அச்சடிக்கவில்லை. இதன் பின்னர்தான், 1987-ல் அகமதாபாதில் முதன்முறையாக பா.ஜ.க. வெற்றி பெற்றது. 

எங்கள் பணி மற்றும் சேவையை மக்கள் கண்டனர். இதன் விளைவாகவே, இப்போது பல ஆண்டுகளாக எங்களை குஜராத் மக்கள் நம்பி வருகின்றனர். இவை அனைத்தும் ஒரு நகரத்தில் தொடங்கியது. கேரளத்திலும் இது ஒரு நகரத்தில் தொடங்கியுள்ளது. கேரளம், பா.ஜ.க. மீது நம்பிக்கை கொண்டுள்ளது. குஜராத்தில் ஒரு நகரத்தில் பா.ஜ.க. ஆட்சி தொடங்கியதுபோல, கேரளத்திலும் நடக்கும்" என்று தெரிவித்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து