எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாளையொட்டி, வரும் 14-ம் தேதி சென்னையில் அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளனர். "அ.தி.மு.க. அம்மா" தலைமைக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127-வது பிறந்தநாளான வரும் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை ஆற்காடு சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு, கழக அவைத்தலைவரும், பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சியமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. கழகப் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


