எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பொதுவா... ஸ்பிலிட்டைவிட, விண்டோ ஏ.சி-யி லதான் பாதிப்பு அதிகம்'' புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள்.
1. 5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும். உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்காதீர்கள். நல்ல விலையில் தரமானவற்றை வாங்குங்கள். ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். மலிவான விலைகளில் வாங்கினால், உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
உதாரணத்துக்கு ஸ்பிலிட் ஏ.சி. 1.5 டன் எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும். ஏ.சி. வாங்கும்போது இலவசமாகக் கொடுக்கப்படும் ஸ்டெபிலைசர்கள் தரம் குறைந்தவையாக இருக்கக் கூடும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்குங்கள்.
எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனாலும் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
எக்காரணம் கொண்டும் 16 டிகிரியில் ஏ.சி-யை கொண்டு போகாதீர்கள். வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும். ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு.
பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி, சீக்கிரத்தில் மெஷினை ரிப்பேராக்கிவிடும். நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள். ஃபேன் காற்று, ஏ.சி காற்றை திசை திருப்பி விடும். ஏ.சி காற்று வருவதற்கு சரியான ஃப்ளோ கிடைக்காது. 27 டிகிரியிலும், நல்ல குளுமையை தரக்கூடிய ஏ.சி.தான் தரமானது. 27 டிகிரியில் வைக்கும்போது மூச்சு திணறுவதுபோல் உணர்ந்தால், அந்த ஏ.சி. சரியாக சர்வீஸ் செய்யப்படாததாக இருக்கலாம்.
ஸ்பிலிட் ஏ.சி. எனில் அறையை முழுவதையும் மூடிவிடக்கூடாது. கதவுக்கு அடியில் இருக்கும் வழியிலாவது காற்று போகும் அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும். சிறிய துவாரமாவது போட்டு வையுங்கள். இதனால் ஒரு நாளைக்கு ஒரு யூனிட் கரன்ட் மட்டுமே கூடுதலாகச் செலவாகும். உங்கள் ஏ.சி. கூலாக இல்லையெனில் உடனடியாக சர்வீஸ் ஆட்களை அழைத்து, மெஷினில் கேஸ் போதுமான அளவோடு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நிரப்பச் சொல்லுங்கள்.
ஏ.சி. மெஷின்களைப் பொறுத்தவரை எவாபிரேட்டர் காயில், கண்டன்ஸர் காயில், ஏ.சி. மெஷினுடைய ஃபேன் இந்த மூன்றும் மிகவும் முக்கியம். இந்த பாகங்கள் சுத்தமாக வேலை செய்கின்றனவா என்பதை கண்காணித்துக் கொண்டே இருங்கள். இவை மூன்றும் சரியாக வேலை செய்தாலே மின்சாரம் வீணாகாமல் இருக்கும். ஏ.சி-யை வாங்கும்போது அதுபற்றிய டெக்னிக்கலான விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டும். இதனால், ஏ.சி. சர்வீசுக்கு வருபவர்கள் மேலோட்டமாக சரி செய்வதையும் நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். சர்வீஸ் ஆட்கள் வந்தால் கூடவே இருந்து கவனிப்பது உங்கள் ஏ.சி. மெஷினுக்குப் பாதுகாப்பானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


