முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுட்டு வீழ்த்தப்பட்டதா..? ஈராக்கில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க விமானம்-4 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2026      உலகம்
US-Flight-2026-03-13

தெஹ்ரான், ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியில் அமெரிக்க ராணுவத்தின் கேசி-135 எனும் விமானம் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், கேசி-135 விமானம் ஈராக்கின் மேற்கு மாகாணத்தில் வியாழக்கிழமை (மார்ச் 12) விழுந்து நொறுங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், அந்த விமானத்தில் பயணித்த 6 பணியாளர்களில் 4 பேர் பலியானதாகவும், அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விமானம் தாக்குதலில் வீழ்த்தப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, நடுவானில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திறன்வாய்ந்த கேசி-135 ரக விமானங்கள் போயிங் 707 பயணிகள் விமானத்தின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டவை. மேலும், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கேசி-135 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அமெரிக்க விமானப் படையில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து