முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு

சனிக்கிழமை, 14 மார்ச் 2026      தமிழகம்
CM-1-2024-07-12

சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வி.சி.க. தலைவர் திருமாவளவன் நேற்று சந்திப்பு மேற்கொண்டார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது. கடந்த தேர்தலைப்போலவே வி.சி.க.வுக்கு 6 தொகுதிகள் வழங்க தி.மு.க. முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், வி.சி.க. 12 தொகுதிகள் வரை கேட்டுள்ளதாகவும் இதனால் வி.சி.க.வுக்கு 8 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நேற்று அல்லது நாளை வி.சி.க.வுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து