முக்கிய செய்திகள்

தென்கொரியா சம்பா மிளகாய் பரிசோதனை முறையில் நடவு

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      வேளாண் பூமி
milakai

Source: provided

தென்கொரியா சம்பா மிளகாய் வடகாடு மலைப்பகுதியில் பரிசோதனை முறையில் நடவு செய்துள்ளனர். சம்பா மிளகாய் 10 அங்குல நீளத்துடன் விளைச்சல் அடைந்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, வடகாடு மலைப்பகுதியைச் சேர்ந்த பால்கடையைச் சேர்ந்த ராமசாமி (வயது 52) என்பவர் தனது சுமார் 2 நிலத்தில் குடைமிளகாய் நடவு செய்துள்ளார். பெங்க@ரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தென்கொரியாவைச் சேர்ந்த 15987 ரக சம்பா மிளகாயை 100 செடியை இவரது தோட்டத்தில் பரிசோதனை முறையில் நடவு செய்துள்ளனர்.

இந்த சம்பா மிளகாயின் விளைச்சல் 70 நாட்களாகும். இவைகள் இயற்கை முறையில் மாட்டு கோமியம், பயோபைட், மைட்ரிச் போன்ற இயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படுகிறது. சாதாரணமாக உள்@ர் சம்பா மிளகாய் 4 அங்குலம் முதல் 5 அங்குலம் வரை நீளம் உடையது. ஆனால் தென்கொரியாவைச் சேர்ந்த சம்பா மிளயாய் சுமார் 9 அகலம் முதல் 10 அங்குலம் அகலம் வரை விளைச்சடைந்துள்ளது.

நல்லவிளைச்சலை கொடுத்ததால் இவற்றை கேராளாவைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றுள்ளனர். மலைப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தென்கொரிய சம்பா மிளகாயை ஆச்சர்யத்துடன் தினமும் கூட்டம், கூட்டமாக ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: