முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காய்கறி பயிர்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி?

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

பொதுவாக காய்கறிப் பயிர்களான கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற பயிர்களில் தற்பொழுது வீரிய ஒட்டு ரகங்களை விவசாயிகள் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த ரகங்களின் விதைகளின் விலை மிகவும் அதிகம். அதிக விலை கொடுத்து விதைகளை வாங்கி பயிர் செய்யும் பொழுது அதற்கேற்ற மகசூல் பெற்றால்தான் விவசாயிகள் நல்ல லாபம் பெறமுடியம். எனவே, அதிக மகசூல் காய்கறிப் பயிர்களை பெறுவதற்கு கீழக்கண்ட தொழில் நுட்பங்களை கடை பிடிக்க வேண்டும். முதலாவதாக விதை நேர்த்தி செய்தல் வேண்டும்.

விதை வீரிய ஒட்டு ரகமாக இருந்தால் அவைகள் ஏற்கனவே விதை நேர்த்தி செய்யப்பட்டிருக்கும். நாட்டு ரக, உள்ளூர் ரக விதைகளாக இருந்தால் விதை நேர்;;;த்தி செய்தல் அவசியம். மேலும், விதைகளை நல்ல முளைப்புத்திறன் உள்ள விதைகளை தேர்வு செய்தல் வேண்டும்.

விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைகோடெர்மா விரிடி வகைக்கு 4 கிராம் வீதம் எடுத்து நன்கு கலந்து விதைக்க வேண்டும். கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற பயிர்களை குழித்தட்டு நாற்று முறையிலோ அல்லது மேட்டுப் பாத்தி முறையிலோ நாற்று விட்டு வளர்;த்து வயலில் நடவு செய்ய பயன்படுத்த வேண்டும். நடவு வயலை மண் பரிசோதனை செய்தல் மிகவும் அவசியம். மண்ணின் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பயிருக்கேற்ப உரங்களை அடியுரமாகவும், மேலுரமாகவும்  இடுதல் வேண்டும்.

அடுத்து நாற்றுகளை நடவு வயலில் நடவு செய்யும் போது ரகங்களுக்கு ஏற்றவாறு பயிருக்கு ஏற்ப இடைவெளி அதாவது 60 செ.மீ முதல் 75 செ.மீ வரை இடைவெளி விட்டு நடவு மேற்கொள்ள வேண்டும். இதனால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலிருந்து பயிர்கள் தப்பித்துக் கொள்கின்றன. மேலும், நல்ல காற்றோட்டத்துடன் கூடிய சூழலில் பயிர்கள் வளர்வதால் மகசூல் அதிகம் பெறலாம்.  மேலும், சொட்டுநீர் பாசன முறையில் காய்கறி பயிர்கள் பயிர் செய்தால் 30 முதல் 50 சதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம். நல்ல தரமான விளைபொருட்களை பெறலாம்.

கத்தரிப்பயிர் சொட்டுநீர் பாசனத்தில் 6 முதல் 8 மாதம் வரை நல்ல மகசூல் கொடுக்கிறது. அடுத்ததாக வருவது நுண்ணுட்டச்சத்து குறைபாடு. காய்கறிகளில் பொதுவாக போரான், துத்த நாகதம், இரும்பு சத்துக்களின் குறைபாட்டினால் மகசூல் பாதிக்கப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு நீரில் கரையக்கூடிய போரான் 2 கிராம், துத்த நாகசல்பேட் 5 கிராம், பெரஸ்சல்பேட் 5 கிராம் என்ற அளவில் எடுத்து நீரில் கலந்து வடிகட்டி காலை அல்லது மாலை வேலைகளில் பூப்பதற்கு முன்பும், காய்கள் வளர்ச்சி பருவத்திலும் தெளிக்க வேண்டும்.

இதனால் மகசூல் அதிகரிக்கும். எனவே காய்கறி சாகுபடி விவசாயிகள் மேற்காணும் தொழில்நுட்பங்களை தவறாது கடைபிடித்து அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!