முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக த.வெ.க. ஆர்ப்பாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2025      தமிழகம்
TVK 2025-11-16

Source: provided

சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் கடைசியாக தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இப்போது தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிக்காக தேர்தல் ஆணையத்தால் பிரத்யேக கணக்கீட்டுப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான படிவத்தை வாக்குச்சாவடி அலுவலர்கள் கடந்த 4ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர். இதனிடையே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு திமுக கூட்டணிக் கட்சிகள், த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இதனைக் கண்டித்து த.வெ.க. சாா்பில், மாவட்டத் தலைநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து