முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க இன்று தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவாரா?

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2025      இந்தியா
nitish-kumar

Source: provided

பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபறுகிறது. இதில் பீகாரின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது தெரிய வரும்.

2025 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, அதைத் தொடர்ந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களை வென்றது. லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19 இடங்களையும், எச்.ஏ.எம். 5 இடங்களையும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களையும் வென்றன. எதிக்கட்சிகளின் மகா கூட்டணி 35 இடங்களை மட்டுமே வென்றது. ஓவைசி கட்சி 5 இடங்களிலும், பி.எஸ்.பி. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், பீகாரில் புதிய அரசு அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பதவியேற்பு விழாவுக்காக பாட்னாவின் காந்தி மைதானத்தில் ஏற்பாடுகள் முழு வீச்சில் உள்ளன, இந்த நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18-வது பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் கவர்னர் ராஜேந்திர அர்லேகரிடம் சமர்ப்பிக்கும். அதன் பிறகு புதிய சட்டப்பேரவையை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். 17-வது சட்டப்பேரவையை கலைப்பதற்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் நிதிஷ் குமார் இன்று அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். அதன் பின்னர் அவர் ராஜ் பவனுக்குச் சென்று தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அவர் பதவி விலகியவுடன், கூட்டணியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் சட்டப்பேரவை கட்சிக் கூட்டங்களை நடத்தும். அதன் பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் ஆலோசித்து புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவையை தேர்ந்தெடுத்து, புதிய அரசாங்கத்தை அமைக்க கவர்னரிடம் உரிமை கோருவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து