முக்கிய செய்திகள்

ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு அவசியம்

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      மருத்துவ பூமி
medcine

Source: provided

நமது வாழ்க்கை தேர்வுகள் நம்மை பல்வேறு வாழ்க்கை முறை நோய்களுக்கு இலக்காக்கியுள்ளது. புகைபிடித்தல், உடல்ரீதியிலான செயல்பாடுகளின்மை, உணவு விருப்பங்கள் மற்றும் தூசுகள் மற்றும் மாசுபாடுகள் போன்ற சுற்றுச்சூழல் காரிணிகள் நமது நுரையீரலை மிகவும் நலிவுறச்செய்துள்ளது. அதிகப்படியாக நலிவுற்ற நுரையீரல், மேலும் தொடர்ந்து கடினமாக உழைத்து நமது உடலுக்கு காற்றை செலுத்துகிறது. பெரும்பாலும் இவைகளே, ஆஸ்துமாவைத் தூண்டும் முதன்மை காரணிகளாகத் திகழ்கின்றன.
 
எனவே உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை அடையாளம் காண்பதன் முதல் படிநிலை “உங்கள் நுரையீரலின் எண்ணை தெரிந்துகொள்வதாகும்” நுரையீரல் எண் எனில், உங்கள் நுரையீரல் எவ்வளவு சிறப்பாக செயலாற்றுகிறது என்பதன் மதிப்பீடு ஆகும். உங்களுக்கு ஆஸ்துமா இருப்பின், உங்கள் நுரையீரலால் போதுமான அளவு காற்றை உள்ளேயும் மற்றும் வெளியிலும் கொண்டு செல்ல முடியாது மற்றும் எந்த அளவிற்கு ஆஸ்துமான தீவரமாக உள்ளதோ அந்த அளவிற்கு குறைவாகவே உங்கள் நுரையீரலால் காற்றை செலுத்த முடியும், என்று மதுரை ஸ்ரீ செஸ்ட் மற்றும் இஎன்டி சென்டர் டாக்டர் எம்.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.


 
உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் முதன்மை காரணியாக நாம் பொதுவாக இதய ஆரோக்கியத்தையே கருதுவோம். ஆனால் நாம் அதில் ஒரு முக்கிய விஷயத்தை தவறவிடுகிறோம். நமது நுரையீரல் செயல்திறன் ஏற்படுத்தும் பாதிப்புகள் பெரும்பாலும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதொரு நோயாளி அவரது ஃ அவளது ரத்த அழுத்தத்தை அவ்வப்போது சோதிப்பது எத்தனை முக்கியமோ அதே போல், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட அல்லது சுவாசிப்பதில் சிரமத்தை உணரும் நோயாளிகள் அவர்களது நுரையீரல் செயல்திறனை பரிசோதனை செய்ய வேண்டியது முக்கியமாகும். இந்த பரிசோதனை “உங்களது நுரையீரலின் எண்ணை” அறிய உதவும். இந்த எண் ஸ்பைரோமெட்ரி சோதனை அல்லது பல்மனரி சோதனை போன்ற எளிமையான மற்றும் செலவு குறைவான பரிசோதனைகள் வழியாக பெறப்படலாம்.
 
நீண்ட கால சிகிச்சை தேவைப்படும் நாட்பட்ட நோய் ஆஸ்துமா ஆகும். பல நோயாளிகள் நோய் சுகமானதை உணர்ந்தவுடன் சில வாரங்களில் இன்ஹேலர்களை பயன்படுத்துவதை கைவிட்டுவிடுகின்றனர். அவ்வாறு கைவிடுவது, எது அவர்களை சிறப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் பராமரிக்கிறதோ அதையே முற்றிலுமான கைவிடுவதற்கு காரணமாகிறது. இன்ஹேலர்கள் பயன்பாட்டினை நிறுத்த நினைக்கும் ஒவ்வொரு சிறிய விஷயம் குறித்தும் மருத்துவரிடம் கலந்தாலோசிகாமல் செயலாற்றுவது என்பது, மிக ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்” என்று கூறினார்.
டாக்டர் பழனியப்பன்

இதை ஷேர் செய்திடுங்கள்: