Idhayam Matrimony

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவு: மூச்சு திணறி 18 தொழிலாளர்கள் பலி

திங்கட்கிழமை, 8 மே 2017      உலகம்
Image Unavailable

பீஜிங்  - சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விஷவாயு கசிவு
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் மாகாணத்திற்குட்பட்ட ஹூவாங்பென்கியாவ் நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் வழக்கம்போல் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆழமான ஒரு பகுதியில் மேலும் தோண்டியபோது பூமியின் அடியில் இருந்து திடீரென்று விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தால் அங்கு வேலை செய்துகொண்டிருந்த பல தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி மூச்சுத்திணறலால் திக்குமுக்காடினர்.

18 உடல்கள் மீட்பு
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மீட்புப் படையினர் 37 பேரை உயிருடன் மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். உள்ளே சிக்கியிருந்த மேலும் சிலரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் 18 பிரேதங்களை மீட்பு படையினர் கண்டெடுத்துள்ளனர். உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சீனாவில், இதுபோன்ற சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. தேவையான பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்காததால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago