எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி மதுரையில் நேற்று 3 இடங்களில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உருவம்பொறித்த ராட்சத பலூன்களை தமிழக அமைச்சர்கள் நேற்று பறக்கவிட்டனர். அ.தி.மு.க.நிறுவனர் எம்.ஜி.ஆரின் 100 - வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அரசு சார்பில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் நிகழ்ச்சியாக மதுரையில் வருகிற 30 - ம் தேதி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. மதுரை பாண்டிகோவில் அருகே அம்மா திடலில் நடைபெறும் இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் பெரியார் பஸ்நிலையம், யானைக்கல், மாட்டுத்தாவணி ஆகிய 3 இடங்களில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உருவம் பொறித்த ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டது. மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார்,ஓ.எஸ்.மணியன், காமராஜ், அன்பழகன், பாஸ்கரன் ஆகியோர் ராட்சத பலூன்களை வானத்தில் பறக்கவிட்டனர்.
இந்நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ், முன்னாள் எம்.எல்.ஏ. கே.தமிழரசன்,மற்றும் நிர்வாகிகள் கு.திரவியம், எம்.எஸ்.பாண்டியன், புதூர்துரைப்பாண்டியன், சி.தங்கம், வில்லாபுரம் ஜெ.ராஜா, பரவை ராஜா, அண்ணாநகர் எம்.என்.முருகன், கே.ஜெயவேல், பைக்காரா கருப்புச்சாமி, வி.கே.எஸ்.மாரிச்சாமி, மா.ஜெயபால், ஏ.கே.முத்திருளாண்டி, செ.பூமிபாலகன், ஜி.என்.அன்புசெழியன், சோலை ராஜா, கிரம்மர் சுரேஷ், வழக்கறிஞர்கள் ரமேஷ், ஏ.பி.பாலசுப்பிரமணி, அசோகன், திருப்பதி மற்றும் நிலையூர் முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


