எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி: - காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பில் “நாட்டு நலப் பணித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்” குறித்த ஒருநாள் கருத்தரங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையாஅவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றுகையில், ஆரம்பத்தில் இந்தியாவில் 37 பல்கலைக்கழகங்களில் மட்டுமே தொடங்கப்பட்ட நாட்டு நலப் பணித்;திட்டம், தற்போது இந்தியாவில் 790 பல்கலைக்கழகங்களில் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது என்றார். மாணவர்கள் கிராமத்தில் வசிக்கும் மக்களை பற்றிபுரிந்து கொள்ளுதல்;, பிரச்சனைகள் மற்றும் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவி செய்தல் ஆகியவற்றிற்கு நாட்டு நலப் பணித்திட்டம் உதவி புரிகிறது. மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், தலைமைப் பண்பைவளர்க்கவும் நாட்டுநலப்பணித்திட்ட முகாம்கள் வாய்ப்பாக அமைகின்றன. மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் போது அவர்களே அனைத்தையும் கற்றுக் கொள்வார்கள். பிறரோடு ஒத்துப்போதல், இணைந்து பணியாற்றுதல், உணர்ச்சி வசப்படும் போது தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை நாட்டுநலப் பணித்திட்ட பணிகள் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
சமுதாயசேவை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில்,அவர்களுக்கு சிறந்த பயிற்சியினை அளிப்பது இந்த நாட்டு நலப்பணித்திட்டத்தின் முக்கிய பணியாகும். சமுதாயத்திற்கு சேவையாற்றும் வகையில் மாணவர்களை உருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாகும். இத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு நாட்டுநலப் பணித் திட்டம் உறுதுணையாக உள்ளது. இந்த நாட்டுநலப் பணித்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் தாமாகவே முன்வரவேண்டும் எனகேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை நாட்டுநலப் பணித்திட்ட மண்டல இயக்குநர் திரு. சாமுவேல் செல்லையா, தொடக்க உரையாற்றினார். அவர் தம் உரையில், ஒருவரது வார்த்தையும், செயலுமே மனிதனின் அலங்காரமாக ஆகுமேதவிர, பிறஎதுவும் அலங்காரமாக ஆகாது. ஒவ்வொருவரும் முதலில் அவரவரை நேசிக்க வேண்டும். அதன் மூலமாகவே அவர்கள் வாழ்க்கையை நேசிக்க முடியும். ஆசிரியர்களே கல்வி நிறுவனங்களுக்கு தூண் போன்றவர்கள். ஆசிரியர்கள் அறியாமையையும், இருளையும், நீக்கி வெளிச்சம் ஏற்படுத்துபவர்கள். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்களாகிய ஆசிரியர்கள் வார்த்தையினாலும், செயலினாலுமே மற்றவர்களை கவரவேண்டும். அதற்கு ,நாட்டுநலப் பணித்திட்டம் வாய்ப்பாக அமைகிறது. மாணவர்களை நாட்டு நலப் பணித்திட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களை பொது நலத்தில் அக்கறை உடையவர்களாக ஆக்கவேண்டியது நம் அனைவரது கடமையாகும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், இராமநாதபுரம் சார்புநீதிபதிசி. சொர்ணகுமார் கருத்துரை வழங்கினார். அவர் தம் உரையில், மாவட்டசட்டப் பணி ஆணைக்கு ழுநாட்டுநலப் பணித்திட்டத்துடன் இணைந்து கிராமங்களில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டுமென்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் வழிகாட்டியுள்ளது. அவ்வகையில், நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்கள் தத்தம் பகுதிகளில் சட்டவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ,நாட்டுநலப் பணித்திட்ட தொண்டர்களை ஈடுபடுத்தவேண்டும் எனகேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட பயிற்சிமைய ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஆர்.ராணி வாழ்த்துரை வழங்கினார்.
அழகப்பாபல்கலைக்கழகத்தில் செயல்படும் 96 அலகுகளுக்கான நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. இராசாராம் வரவேற்புரையாற்றினார். நிறைவாக, நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் பி. சீனிவாசன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


