எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்பொரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன், தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்து போரிட்டான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது. மிகவும் கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி ஏற்பட்டது. அதனால் கண்ணில் கண்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியது. சிவபெருமான் அந்த பூதத்திற்கு அனைத்தையும் உண்ணும் வரத்தை அளித்தார்.
வீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் - Vastu Part 3
வாஸ்து கூறும் வாழ்வின் ரகசியம் | Vastu Shastra in Tamil | Episode - 1
இதனால் அந்த பூதத்திற்கு இந்த பூமியையே அளிக்கும் சக்தி உண்டானது. உடனே தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிறகு பிரம்மதேவன் அந்த பூதத்திடம் பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை உண் என்றும், சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வசிப்பவரை வாட்டு என்றும் வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்றும் வாஸ்துப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மைகளையும், மற்றவர்களுக்கு தீமையையும் அளித்து வருகிறார். வாஸ்து என்றால் வாழும் இடம் என்று பொருள். மிகச்சரியான வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது. நிம்மதி மகிழ்ச்சி பெருகும்.
“வாஸ்து” என்ற சொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக் கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில் நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் வாஸ்து பற்றி சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன.
வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்க வேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்கு பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை. இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம்மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன. முக்கியமான எட்டுத் திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்டதிக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குப் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள். இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப்படுத்துகின்றது. இந்த உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும் போது, வடகிழக்கில் தலையும், தென்மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக் குப்புறப்படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விபரிக்கப்படுகின்றான்.
வாஸ்து குறிப்புகள்
1. வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும்.
2. வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம்.
3. மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது.
4. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.
5. வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது.
6. மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.
7. வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும்.
8. வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.
9. தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும்.
10. வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.
11. பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும்.
12. வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.
13. கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும். கழிப்பிடம் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைய வேண்டும். செப்டிக் டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு சுவரை தொடாமல் கட்ட வேண்டும்.
14. தென் மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் நீர் உபயோகத் தொட்டி அமைய வேண்டும்.
15. அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைவது நல்லது.
16. வீடு மற்றும் காம்பவுண்டின் வடகிழக்கு மூலை வளைவாக இருக்க கூடாது.
17. மாடிப்படி தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைய வேண்டும்.
18. வீட்டிற்கு தெற்கு மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும்.
19. வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல் வேண்டும்.20. ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்ப்பது நல்லது. உயரமான துளசி மாடம் கட்டக்கூடாது. ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது. ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது. ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது.
21. ஆட்டுக்கல், அம்மி, தெற்கு, மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் அமைக்கலாம். வடகிழக்கு பகுதிகளில் அமைக்கக் கூடாது.
22. பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற மின்சாதனப் பொருள்கள் அறையின் தென்கிழக்கில் அமைக்கலாம்.
23. அக்னி மூலையில் படுக்கை அறை கூடாது.
24. தெற்கு பார்த்து சமைக்காதீர். மருத்துவ செலவுகளுக்கு வழி கோலும்.
25. உண்ணல், படித்தல் கிழக்கு நோக்கி இருப்பது தான் நல்லது.
26. வடக்கே தலை வைத்து படுக்கை அமைப்பது கூடாது.
27. வீட்டின் வடக்கே, கிழக்கே உயரமாக வளரும். நிழல் தரும் மரங்கள் வளர்க்க கூடாது.
28. வீட்டின் தெற்கு அல்லது மேற்கே உள்ள உயரமான மரங்களை வெட்டக் கூடாது.
29. வீட்டின் வடகிழக்கில் நீர்தேக்கத் தொட்டி அமைக்கக் கூடாது.
30. வீட்டின் வடகிழக்கு தென்மேற்கு மூலையில் கழிவறை மற்றும் செப்டிக் டேங்க் அமைக்கக் கூடாது.
31. வீட்டுத் திண்ணைகள் வடக்கேயும், கிழக்கேயும் உயரமாக அமைக்கக் கூடாது.
32. வடக்கு, கிழக்கு காம்பவுண்டு சுவரின் மேல் பூந்தொட்டி வைக்கக் கூடாது.
33. வீட்டின் தென்மேற்கு மூலையின் மெயின்கேட், போர்டிகோ தலைவாசல் மற்றும் கிணறு அமைந்திருந்தால் வேதனைகளும் சோதனைகளுமே வரும்.
34. வாசலுக்கு எதிரே கிணறோ, குழியோ இருக்கலாகாது.
35. வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை வாங்கலாம்.
36. வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை இனாமாகக் கூட வாங்கி சேர்க்கக் கூடாது.
37. ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு பாகப்பிரிவினைச் செய்ய கூடாது.
38. ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட விரும்பினால் முதலில் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும். பிறகு தான் வடக்கு அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு கட்டலாம்.
39. ஓரே மனையில் 2 வீடுகள் கட்டினால் தெற்கிலுள்ள வீட்டை விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை விட கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும் இருக்க வேண்டும்.
40. ஒரு வீட்டு மனையின் எதிரே ஒரு தெரு முடிவதையே தெருக்குத்து அல்லது வீதி சூலம் எனலாம், வடக்கு ஈசானிய தெருக்குத்தும் கிழக்கு ஈசானிய தெருக்குத்தும் வீட்டிற்கு நன்மை தருவனவாம்.
41. தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து வியாபாரத்திற்கு ஏற்றது.
42. மேற்கு வாயு மூலைத்தெருக்குத்து சட்ட நுணுக்கங்களுக்கு ஏற்றது.
43. வடக்கு வாயு மூலை தெருக்குத்து பிரச்சினைகள் தரும். கிழக்கு அக்னி மூலை தெருக்குத்து பிரச்சசனைகள் தரும். மேற்கு நைருதி மூலை தெருக்குத்தும் பிரச்சனைகள் தரும்.
44. ஒரு மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் பாதை இருந்தாலும், 4 திசைகளிலும் பாதை இருந்தாலும் சிறப்புடையது.
45. வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும் முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு மனையின் ஈசானியத்தில் வாஸ்து பூஜை (பூமி பூஜை) செய்தல் மிக நல்லது.
46. வீட்டை செப்பனிடும் முன் வாஸ்து நிபுணர்களைக் கொண்டு தீர நிதானமாக ஆராய்ந்த பின் பழுது பார்க்கும் பணியை வேகமாகவும் கவனமாகவும் செய்ய முடிக்க வேண்டும்.
47. வீடு பழுது பார்க்கும் பணிகளை மெதுவாகச் செய்தாலும் பரவாயில்லை. பாதியில் நிறுத்தவேக் கூடாது.
48. முறையான கணக்குகளுடன் செய்யப்பட்ட பிரமிடுகளை வீட்டில் உபயோகப்படுத்தி மூப்பினை அகற்றலாம். மேலும், மனஉலைச்சல், பல்வேறு பிரச்சனைகளை நீக்கி நிம்மதியாக நம்மை வாழவும் வைக்கின்றது.
49. வீட்டில் தினந்தோறும் சூரியோதம் சூரியன் மறைவு நேரத்தில் செய்யப்படும். அக்னி ஹோத்திரம் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வு அமையவும் உதவும். வீட்டில் நாமே செய்யும் யாகமே அக்னி ஹோத்திரம்.
50. வீட்டில் தலைவாசல் அமைக்கும் போது கட்டிடத்தின் முன்பக்கத்தினை அளந்து அதை 9 சம பாகங்களாக்கி 4, 5, 6வது பாகங்களில் தகுதியான இடத்தில் தலைவாசல் அமைக்கலாம்.
51. வீட்டின் தென்மேற்கு சேமிப்பு அறை, படுக்கை அறை, பீரோ, பெட்டி வைக்கவும்.
52. வீட்டின் தெற்கில் படுக்கை அறை இருப்பது நல்லது.
53. வீட்டின் தென்கிழக்கில் தான் சமையல் கிழக்கே பார்த்து சமைக்கும் படியாக இருத்தல் வேண்டும்.
54. வீட்டின் கிழக்கில் தான் குளியல் அறை அமைத்தல் வேண்டும்.
55. வீட்டில் சாப்பிடுமிடம் மேற்கிலும் சாப்பிடும் போது கிழக்கு திசை பார்த்து சாப்பிட வேண்டும்.
56. வீட்டின் வடமேற்கில் தான் தானியக் கிடங்கு இருத்தல் வேண்டும்.
57. வீட்டின் வடக்கில் தான் பணம் வரவு வைத்தல் எடுத்தல் வேண்டும்.
58. வீட்டின் வடகிழக்கு திசையில் தான் இறைவழிபாடு, தியானம் செய்தல் உயர்வானது.
59. வீட்டின் நடுவில் சந்திப்புக் கூடம் இருத்தல் வேண்டும்.
60. வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுதல் மிக மிக உயர்வானது.
61. எதிர்வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் நம் வீட்டு தலைவாசல் இருக்கவே கூடாது.
62. தினமும் பூஜையறையில் தெய்வ பிரார்த்தனை செய்தல் வேண்டும். விளக்கு ஏற்ற வேண்டும். நறுமண பத்தி உபயோகப்படுத்துங்கள்.
63. தலைவாசல், கடைவாசல் நேர் எதிரில் சூரிய ஒளிபடியுமிடமான முற்றத்தில் துளசி மடம் அமைத்து வழிபடுதல் நல்லது.
64. வீட்டின் முன்புறம் பூச்செடிகளும், பின்புறம் பலன் தரும் மரங்களும் இருப்பது மிக மிக நல்லது.
65. வீட்டு எஜமானன் நீடித்த ஆயுளோடு இருக்க மனைப் பொருத்தத்தில் சூத்திரத்திப் பொருத்தத்தில் மரண சூத்திரம் வரக்கூடாது.
66. மேற்குத் திசை உயரமாகவும், கிழக்குத் திசை பள்ளமாகவும் இருந்தால் செல்வந்தராக்கி விடும். கிழக்கு மேடாகவும், மேற்கு பள்ளமாகவும் இருந்தால், ஏழையாக்கி விடும். தரித்திரம் ஏற்படும். வடக்கு மேடாகவும், தெற்கு பள்ளமாகவும் இருந்தால், வீட்டுத் தலைவனுக்கு மிகத் தீயதைக் கொடுக்கும். கண்டங்கள் ஏற்படும். தெற்கு உயரமாகவும், வடக்கு பள்ளமாகவும் இருந்தால், செல்வ வளர்ச்சியைக் கொடுக்கும்.
67. ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால் பல துயரங்களில் ஆழ்த்தி விடும். சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும். அக்னி மூலை மேடாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால், நல்லவை நடக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும். வாயு மூலை மேடாகவும், அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், அவ்வீட்டில் தீ விபத்து, திருட்டு போன்றவை ஏற்படும். கன்னி மூலை உயரமாகவும்,ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால், மிக்கசெல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும்.
68. கிழக்கு, அக்னி மூலை ஆகியவை உயரமாகவும், வாயு மூலையும் மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், துயரத்திலும், சிக்கலிலும் ஆழ்த்தி விடும்.
69. அக்னி மூலையும், தெற்கும் உயரமாகவும், வாயுமூலையும், வடக்கும் பள்ளமாகவும் இருந்தால் பல வகை இலாபங்கள் ஏற்படும்.
70. தெற்கும், தென்மேற்கும் உயரமாகவும், வடக்கும், ஈசான்யமும் பள்ளமாகவும் ஆனால் அவ்வீட்டில் இருப்பவரை லட்சாதிபதியாக்கி விடும். நீண்ட ஆயுள், சந்தானம் விருத்தி ஏற்படும்.
71. தென்மேற்கும் (கன்னி) மேற்கும், உயரமாகவும் இருந்தால் பல வழிகளில் நன்மைகள் உண்டாகும்.
72. வாயுமூலையும், மேற்கும் உயர்ந்து, அக்னி மூலையும் கிழக்கும் தாழ்ந்து இருந்தாலும், பகைவரையும் துயரத்தையும் ஏற்படுத்தும். தீ அபாயங்களை ஏற்படுத்தும்.
73. வடக்கும், வடமேற்கும் உயர்ந்தும், தெற்கும், அக்னி மூலையும், பள்ளமாகவும் இருந்தால் நோய்கள் வாட்டும். நீண்ட கால வியாதிகள் தோன்றும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-07-2025.
14 Jul 2025 -
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
மாயக்கூத்து திரை விமர்சனம்
14 Jul 2025எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார்.
-
சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்
14 Jul 2025சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
கைமேரா இசை வெளியீட்டு விழா
14 Jul 2025மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி: இயக்குனர் பா.ரஞ்சித் வழக்கு பதிவு
14 Jul 2025நாகை : படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் நடைமுறைக்கு வந்தது 'ப; வடிவ வகுப்பறைகள்
14 Jul 2025சென்னை, தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.500 வினியோகம் நிறுத்தம்? மத்திய அரசு விளக்கம்
14 Jul 2025புதுடெல்லி, சட்டப்பூர்வமாக ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
நாடு முழுவதும் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: இந்திய தேர்தல் கமிஷன் திட்டம்
14 Jul 2025புதுடெல்லி, நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.