Idhayam Matrimony

கொலம்பியா தீவிரவாத அமைப்பை ஜனநாயக பாதைக்கு வழிநடத்திய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

புதன்கிழமை, 6 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

கொலம்பியா: கொலம்பியாவில் பார்க் என்ற தீவிரவாத அமைப்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. அந்த நாட்டு அரசுக்கும் பார்க் அமைப்புக்கும் இடையே ஓராண்டுக்கு முன்பு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் பார்க் தீவிரவாத அமைப்பு கடந்த 1-ம் தேதி ‘சாமானியர்களுக்கான மாற்று புரட்சிகர படை’ என்ற பெயரில் அரசியல் கட்சியாக உருவெடுத்தது. கொலம்பியா தலைநகர் பகோடாவில் நடந்த விழாவில் பார்க் அமைப்பின் முன்னாள் கமாண்டர் திமோலின் ஜிம்மென்ஸ் புதிய கட்சியை அறிவித்தார். கட்சியின் புதிய தலைவராக இவான் மார்கியூஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். விழாவில் வாழும் கலை அமைப்பின் சார்பில் சுவாமி பரம்தேஜ் பங்கேற்றார். பார்க் அமைப்பின் முன்னாள் கமாண்டர் திமோலின் ஜிம்மென்ஸ் பேசியபோது, “ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தது ஓர் அதிசயம். காந்திய கொள்கையைப் பின்பற்றுவோம் என அவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து