முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நலம் தரும் நவராத்திரி - சக்தி வழிபாட்டின் தத்துவம்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது. நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன் மாதா பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி சிவசக்தியாக ஐக்கிய ரூபிணியாக அர்த்த நாரிசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.

இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும். மகேஸ்வரி, கௌமாரீ, வராஹி என துர்கா தேவியாகவும், அடுத்த மூன்று நாட்களில் மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும், நிறைவுறும் மூன்று தினங்களில் சரஸ்வதி நரசிம்மீ சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குகிறோம். இந்த நாட்களில் நைவேத்யங்களைப் படைத்து கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை பாடி, ஆடி பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்டவரத்தை சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.

கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பதன் நோக்கம்

நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும் இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக்காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.

• முதல் படியில் ஒரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல் செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

• இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

• மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்

• நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்

• ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்

• ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

• ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

• எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும் நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.

• ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு - சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி லட்சுமி பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.

சாரதா நவராத்திரிப் பெருவிழாவில் அம்பிகைக்கு செய்யவேண்டிய அலங்காரங்கள், அர்ச்சனை மலர்கள், பழம் இலை நிவேதனம் ஆகியவற்றை பார்ப்போம்....!

நவராத்திரி நாட்கள்   அலங்காரங்கள்  அர்ச்சனை மலர்கள்   பழம், இலை  நிவேதனம்

1 நாள்   மகேஸ்வரி  வில்வம் மல்லி   வாழை  வில்வம்   வெண்பொங்கல் காராமணிசுண்டல்

2 நாள்   கௌமாரி துளசி,  முல்லை , துளசி  மாம்பழம்   புளியோதரை புட்டு

3 நாள்   வாராகி சண்பகம், மரு, சம்பங்கி   பலா, மரு    சர்க்கரை பொங்கல் பலா, எள்ளுப்பொடி

4 நாள்   மஹாலட்சுமி ஜாதிமல்லி   கொய்யா, கதிர்பச்சை தயிர்சாதம் பட்டாணி

5 நாள்   வைஷ்ணவி  விருட்சிபூ செண்பகம் மாதுளை வீபூதிப்பச்சை பொங்கல், வடகம், பயாசம், மொச்சைப்பயிறு, சுண்டல்

6 நாள்   இந்திராணி  குங்குமப்பூ பாரிஜாதம்  நாரத்தை சந்தனம்   தேங்காய்சாதம் மாதுளை சாத்துகொடி மொச்சைப்பயிறு சுண்டல்

7 நாள்   சரஸ்வதி   தும்பை, தாழம்பூ  பேரீட்சை தும்பை  எலுமிச்சைசாதம்; கடலைப்பருப்பு   சுண்டல் சத்துமாவு

8 நாள்   நரசிம்ஹி  மருதாணி சம்பங்கி   திராட்சை பன்னீர்  பால்சாதம் அப்பம்

9 நாள்   சாமுண்டிஸ்வரி மரிக்கோ முத்து தாமரை  நாவல் மரிக்கொழுந்து  வெல்லசாதம் கொண்டை கடலைசுண்டல்

10 நாள்   மஹா துர்க்கை செவ்வரளி, ரோஜா  செவ்வாழை   சர்க்கரை பொங்கல் புளியோதரை தயிர்சாதம்

தகவல்: சங்கரலிங்க சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவில் அர்ச்சகர்,
தொகுப்பு: ஜஸ்டின்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து