எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் ஐhப்ராபேட்டை ஊராட்சியில் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள வீடுகளில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைப்பெற்று வருவதை கலெக்டர் ஆய்வு செய்தார். வீடுகளில் உள்ள பொதுமக்களிடம் இப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஏதெனும் காய்ச்சல் இருந்ததா என்பதை கேட்டறிந்தார். வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் டெங்கு கொசு புழு டார்வா உள்ளதா என்றும் ஆய்வு செய்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தொட்டிகளில் பிளிச்சிங் பவுடர் போட்டு தொட்டிகளை சுத்தம் செய்து தண்ணீரை உபயோகிக்க பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
கலெக்டர் ஆய்வு
பின்னர் வீடு வீடாக ஆய்வு செய்ய சுகாதார பணியாளர்கள் முறையாக ஆய்வு செய்ய வருகிறார்களா என்று கேட்டறிந்து கொசு மருந்து புகை அடிப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து சுகாதார மருத்துவரிடம் நாள்தோரும் பணியாளர்கள் எவ்வளவு நபர்கள் இப்பணியில் உள்ளனர் அவர்களுக்கு எவ்வாறு பணிகள் ஒதுக்கப்படுகின்றது என்பதை கேட்டறிந்து அனைத்து ஊராட்சிகளிலும் பணியாளர்கள் இப்பணிகளை முடித்த பின்னர் அவர்கள் முறையாக டெங்கு கொசு உற்பத்தி ஒழிப்பு ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனரா என்பதை கண்காணிக்க அலுவலர் ஒருவரை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவ அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து ஊராட்சி அலுவலகம் எதிரே நிலவேம்பு கசாயத்தை அப்பகுதி பொதுமக்களுக்கு கலெக்டர் அவர்கள் வழங்கி காய்ச்சல் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று முறையாக சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுரைகளை கலெக்டர் சி.அ.ராமன் இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பயிற்ச்சி ஸ்ரீகாந்த். இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஐp, மருத்துவ அலுவலர் மரு.ஏபல்ரோஐர், காட்பாடி வட்டாட்சியர் பாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |