முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் கர்ப்பிணி பெண்களுக்கு சித்த மருத்துவப் பெட்டகம் வழங்கல்.

வெள்ளிக்கிழமை, 29 டிசம்பர் 2017      தேனி
Image Unavailable

கம்பம்,  -தமிழ்நாடு அரசு பொதுசுகாதாரத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பேறடைந்த பெண்களுக்கு சித்த மருத்துவ பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர்கள் டாக்டர் முருகானந்தன் தலைமை வகித்தார்.
மருந்துகள் உபயோகிக்கும் வழிமுறைகள் குறித்து காமயகவுண்டன் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜூதீன் பெண்களுக்கு  விளக்கி கூறினார். அவர் கூறும் போது சித்த மருத்துவ பெட்டகத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு ஊறுவதற்கு  தேவையான சதாவரி லேகியம், உடல் வலி நீக்கும் பிண்ட  தைலம், இரத்த சோகை மற்றும் வாந்தி குமட்டல் போக்கும் மாதுளை  மணப்பாகு, அன்னபேதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் உள்ளது. 
உளுந்து தைலம் கர்ப்பிணிகளின் வெளிப்பிரயோகமாக உபயோகிப்பதன் மூலம் இடுப்புவலி, மூட்டு வலி, கால் உளைச்சல், கெண்டைச்சதை வலி ஆகியவற்றை தவிர்க்கலாம். குந்திரிக தைலம் கர்ப்பிணிகளின் அடி வயிற்று  சதைப்பகுதியில் தொடர்ந்து தேய்த்து வருவதன் மூலம் தசைகளின் நீட்சித்தன்மை அதிகரித்து இயற்கை பிரசவத்துக்கு உதவி புரியும். பிரசவத்துக்கு பின்னர் வயிற்றில் கோடுகள் விழாமல் தடுக்கும் என்றார்.
டாக்டர் சசிதீபா, ஆக்ஸிடோசின் ரிப்ளெக்ஸ் ஏற்படுத்தும் மசாஜ் பெண்களுக்கு கற்றுக்கொடுத்தார். நிகழ்ச்சியில் காமயகவுண்டன்பட்டி, நாராயணத் தேவன் பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன் பட்டி, அண்ணாபுரம், பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 120 பெண்களுக்கு, சித்த மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது.சுகாதார ஆய்வாளர் அமரேசன், சித்த மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து