Idhayam Matrimony

வேட்டவலம் அருகே கால்நடை டாக்டர் வீட்டில் கொள்ளை

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 60 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நகை கொள்ளை

வேட்டவலம் அடுத்த ராஜன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (64) ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் இவரது மனைவி ராஜேஸ்வரி இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சேகர் ஓய்வுபெற்ற பின்பு வீட்டில் இருந்தபடியே தனியாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தும் விவசாயமும் செய்து வருகிறார். சேகரின் தம்பி ராஜேந்திரன் விருத்தாசலம் எல்ஐசி அலுவலகத்தில் வளர்ச்சி அதிகாரியாக இருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் இறந்துவிட்டார். அதற்கான தொகை பெறுவதற்காக சேகர், ராஜேஸ்வரி, ராஜேந்திரன் மனைவி வசந்தா, அவரது மகன் ரஞ்சித் மற்றும் உறவினர்கள் கோபி, சரஸ்வதி ஆகியோர் காரில் சென்று விருத்தாச்சலம் சென்றனர். சேகர் மற்றும் ரஞ்சித் விருத்தாசலத்தில் தங்கினர். மற்றவர்கள் வீடு திரும்பினர். நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் ராஜேஸ்வரி உள்ளிட்ட 4 பேரும் ராஜன்தாங்கல் வந்தனர்.

அனைவரும் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். ராஜேஸ்வரியும் வசந்தாவும் தங்கள் வீட்டுக்கு சென்றபோது கேட் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. இதனால் பின்பக்கம் சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கபபட்டு அதிலிருந்த சுமார் 70 சவரன் நகை , 2 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 60 ஆயிரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வேட்டவலம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். எஸ்பி இரா.பொன்னி, ஏஎஸ்பி ரவளிபிரியா, வேட்டவலம் இன்ஸ்பெக்டர் செந்தில், மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் அருகிலுள்ள பெட்ரோல் பங்க் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து