எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பால் காய்ச்சல் நோயனது அதிகமாகப் பால் கறக்கக்கூடிய கறவை மாடுகளில் கன்று ஈன்ற 48 மணி நேரத்திற்குள் காணப்படுகிறது. சுhதாரணமாக 5 முதல் 10 வயது உடைய மாடுகளை இந்நோய் அதிகம் தாக்குகிறது. கன்று ஈனுவதற்கு முன், கன்று ஈனும் போது அல்லது கன்று ஈன்ற சில வாரங்களில் இந்நோய் ஏற்படலாம். முதல் இரண்டு கறவையில் இந்நோய் அதிகம் தாக்குவது இல்லை. ஒரே மாட்டில் அடுத்தடுத்த ஈற்றிலும் கூட இந்நோய் தாக்க வாய்ப்புள்ளது. குறவை மாடுகளில் பால் வாதத்தினால் ஏற்படும் விளைவுகள் பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன.
இந்நோயிலிருந்து குணமாகும் கறவை மாடுகள் கீட்டோசிஸ் மற்றும் மடி நோயால் பாதிக்கப்படுவது உண்டு. கறவை மாடுகளில் இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. கனறு ஈனும் சமயத்தில் பால் வாத நோய் மாடுகளை பாதித்தால் கன்று ஈனுதலில் சிரமங்கள், தொப்புள் கொடி விழாதிருத்தல், கர்ப்பப்பையில் புண், கர்ப்பப்பை வெளித்தள்ளுதல் போன்ற பாதிப்புகளும் உண்டாகின்றன. அதனால் கறவை மாடுகள் வைத்திருப்போர் பால் காய்ச்சல் நோயைப் பற்றி அறிந்து கொண்டு இந்த நோய் வராமல் தடுக்க வேண்டிய பராமரிப்பு முறைகளையும் நோய் வந்தால் தகுந்த சிகிச்சை முறைகளையும் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
பால் காய்ச்சல் உண்டாவற்கான காரணங்கள்:
இந்த நோயானது கறவை மாடுகளில் இரத்தத்தில் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் ஏற்படுகிறது. மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு சுண்ணாம்புச் சத்து 10 முதல் 12 கிராம் தேவைப்படும். ஆனால் கன்று ஈன்ற மாடுகளில் கூடுதலாக 2 முதல் 3 கிராம் சுண்ணாம்புச் சத்து ஒவ்வொரு கிலோ பாலிலும் வெளியேறுகிறது. பாலின் அளவு அதிகரிக்கும் போது அதன் மூலம் இழக்கப்படும் சுண்ணாம்புச்சத்தின் அறவும் அதிகமாகிறது.
இவ்வாறு இழக்கப்படும் சுண்ணாம்புச் சத்தினை இரத்தத்தில் குறையாமல் இருக்கச் செய்ய வைட்டமின் ~டி|யும், பாராதைராய்டு என்னும் சுரப்பி சுரக்கும் ஹார்மோன் சுண்ணாம்புச் சத்தினை கறவை மாட்டின் எலும்புகளிலிருந்து கரைத்து இரத்தத்தைச் சென்றடையச் செய்கிறது. புhல் காய்ச்சலால் மாடுகள் அவதியுறும் போது பாராதைராய்டு சுரப்பியும், வைட்டமின் ~டி|யைச் சுரக்கும் நாளமில்லாச் சுரப்பியும் பாதிக்கப்படுகின்றன. இவற்றின் அளவுகள் குறைவதால் இந்த நோய் வருகிறது. எலும்புகள், குடல் முதலியவற்றால் உடல் பெறும் சுண்ணாம்புச் சத்தை விட சீம்பாலின் மூலம் இழக்கும் சுண்ணாம்புச் சத்து மிக அதிகம். ஊடலில் சுண்ணாம்புச் சத்து குறையும் போது எலும்புகளில் இருந்து கரைந்து உடலில் சேரும் சுண்ணாம்புச் சத்து ஈடு கொடுக்க முடியாத நிலையில் இந்நோய் ஏற்படுகிறது.
நோய் அறிகுறிகள்:
மாட்டின் இரத்தத்தில் சுண்ணாம்புச் சத்தின் அளவைப் பொறுத்து இந்த நோயின் அறிகுறிகளை மூன்று நிலைகளாகக் காணலாம்.
முதல் நிலை:
இது ஆரம்ப நிலையாகும். பாதிக்கப்பட்ட மாடுகள் நடுக்கத்துடன் காணப்படும். துலை மற்றும் கால் பகுதிகளில் சதைத்துடிப்பும் காணப்படும். இந்த நோய் இதய தசையையும் உடலின் மற்ற தசைகளையும் வலுவிழக்கச் செய்கிறது. தீவனம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமலும், சரியாக நடக்க இயலாமலும், நடக்கும் போது அடிக்கடி கீழே விழுதலும் காணப்படும். இந்நிலையில் மாடு தலையை அடிக்கடி ஆட்டுதலும், நாக்கை வெளியே நீட்டுதலும், பற்களைக் கடித்துக் கொள்ளுதலும் காணப்படும். தீவனம் உட்கொள்ளாது. அசையூன் வயிற்று அசைவுகள் நின்று விடும். உடல் வெப்ப நிலையில் மாற்றம் காணப்படாது. புhல் கறவை முழுவதுமாக நின்று விடும்.
இரண்டாம் நிலை:
இது பால் காய்ச்சல் நோயின் இடை நிலையாகும். இதில் மாடுகள் உட்கார்ந்தவாறு தலையை மார்பு அல்லது வயிறு மீது வைத்துத் தூங்கியவாறு இருக்கும். மூச்சுத் திணறும். நுpற்க இயலாமல் நெஞ்சைத் தரையில் அழுத்தியவாறு உடகார்ந்து விடும். மேலும் தலையை ஒரு புறமாக மடக்கி நெஞ்சுப்பகுதியில் ஒட்டியவாறும் வைத்துக் கொள்ளும். ஊடல் வெப்பநிலைக் குறைந்து காணப்படும். தீவனம் உட்கொள்ளாது. சுhணம் போடாது. வயிறு உப்புசம், கண் மற்றும் மூக்கு வறட்சி போன்றவைகளும் காணப்படும்.
மூன்றாம் நிலை:
இது பால் காய்ச்சல் நோயின் கடை நிலையாகும். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாடுகள் உட்கார முடியாமல் ஒரு புறமாக படுத்து விடும். மிகவும் தளர்ந்த நிலையில் மாடுகள் ஏறக்குறைய சுவாதீனமற்று விறைத்துப் படுத்திருக்கும். மிகவும் குறைந்த உடல் வெப்பநிலையுடன் காணப்படும். கைகளால் நாடித் துடிப்பை உணர முடியாது. இருதய துடிப்பு கேட்காது. உடலில் இரத்த ஓட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மிக நீண்ட நேரம் படுத்திருப்பதால் வயிறு உப்புசமும் காணப்படும். பால் காய்ச்சல் மாடுகளை சிகிச்சை செய்யாமல் விடும் போது நோயின் தன்மை அதிகரித்து மாடு படுத்த படுக்கையாகி செயலிழந்து இறுதியில் இறக்க நேரிடுகிறது.
சிகி;சசை முறை:
மாடுகள் பக்கவாட்டில் படுக்கும் நிலைக்கு முன்பாகவே சஜகஜச்சை அளித்தால் பால் காய்ச்சல் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். சுண்ணாம்புச் சத்து அடங்கிய மருந்தினை கால்நடை மருத்துவரின் உதவியுடன் ஊசி மூலம் இரத்தத்தில் செலுத்துவதன் மூலம் நோயைக் குணபடுத்தலாம். நோயின் ஆரம்ப அறிகுறிகள் காணும் போதே சிகிச்சை செய்வது மிக முக்கியம். சுண்ணாம்புச்சத்தை இரத்த நாளத்தில் செலுத்தும் பொழுதே பால் காய்ச்சல் நோயின் அறிகுறிகள் விடுபட்டு படுத்திருக்கும் மாடுகள் உடனடியாகக் குணமடைந்து எழுந்து நிற்பதைக் காணலாம்.
தடுப்பு முறைகள்:
பொதுவாக நினை மாடுகளை கன்று ஈனும் வரை பால் கறக்கும் பழக்கம் சில விவசாயிகளிடம் உண்டு. அதைத் தவிர்க்க வேண்டும். அதாவது கன்று ஈனுவதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பாகவே பால் கறப்பதை நிறுத்தி விட வேண்டும்.
தீவனத்தில் அதிக மாற்றங்களைத் தவிர்க்க வேண்டும். சினை மாடுகளுக்கு சிலர் சுண்ணாம்புச் சத்தை அதிகமாக ஒரு நாளைக்கு 100 கிராமுக்கு மேலாக மாட்டின் தீவனத்திலோ அல்லது தனியாகவோ கொடுப்பார்கள். அவ்வாறு கொடுக்கும் மாடுகளில் இந்நோய் அதிகமாக வருகிறது. ஆகையால் அதைத் தவிர்க்க வேண்டும். சுண்ணாம்புச் சத்து மிக அதிக அளவில் உள்ள புரதச்சத்து அதிகமுள்ள பசுந்தீவனங்களை குறைவாகக் கொடுக்க வேண்டும்.
முக்கியமாக கடைசி சினை மாதங்களில் பாஸ்பரஸ் தாது உப்பு அதிகமாக உள்ள தீவனமான அரிசித் தவிடு அதிகமாக கொடுக்க வேண்டும்.
மாடுகளை கடைசி சினை மாதங்களிலும், கன்று ஈனுவதற்கு சிறிது நாட்களுக்கு முன்பாகவும், பின்பாகவும் அதிக கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். பால் காய்ச்சல் நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளை கண்டவுடனேயே மருத்துவரிடம் காண்பித்து தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். வைட்டமின் ~டி| சத்து ஊசியை கால்நடை மருத்துவர் உதவியுடன் சினைப் பசுவிற்கு கன்று ஈனுவதற்கு முன் போடுவதன் மூலம் இந்நோய் வராமல் தவிர்க்கலாம்.
சுனைக் காலங்களில் கொடுப்பதனால் தேவையான அளவு சுண்ணாம்புச் சத்து இரத்தத்தில் நிலை நிறுத்தப்படுவதுடன் கன்று ஈன்ற பின்பு பாலில் இழக்கப்படும் இரத்ததின் சுண்ணாம்புச்; சத்தினை சீரமைக்கும் பாராதார்மோன் இயக்குநீரின் அளவும் பாதிக்கப்படாமல் அமைந்து பால்; காய்ச்சல் நோய் உண்டாவது தடுக்கப்படுகிறது.
தொடர்புக்கு : கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பிரட்ஸ் ரோடு, சேலம்-636 001.
தொகுப்;பு : நா. ஸ்ரீ பாலாஜி, து. ஜெயந்தி மற்றும் ப.ரவி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.