எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிக்மகளூரு, உள்ளாட்சி தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத பகுதிகளில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்கும். பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேவகவுடா கூறினார்.
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எகட்டி கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஜனதா தளம்(எஸ்) கட்சி மூத்த தலைவருமான ஒய்.எஸ்.வி.தத்தாவின் மனைவியின் நினைவு நாளில் கலந்து கொள்வதற்காக ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவகவுடா எகட்டி கிராமத்துக்கு வந்தார். அங்கு அவர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் சில மாவட்டங்களில் மட்டும் தான் நடந்துள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகளில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மெஜாரிட்டி கிடைக்காத பகுதிகளில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்கும். பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள், பா.ஜனதா தவிர வேறு எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கொள்வோம்.
கர்நாடகத்தில் தற்போது நடந்த நகர உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு (2019) நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த தேர்தல் முடிவுகளை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


