Idhayam Matrimony

தேனி தொகுதியில் தினகரனே நின்றாலும் கவலை இல்லை: ரவீந்திரநாத் குமார் பரபரப்பு பேட்டி

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      அரசியல்
Image Unavailable

ஸ்ரீவில்லி, தேனி பாராளுமன்ற தொகுதியில் தினகரனே எதிர்த்து நின்று போட்டியிட்டாலும் கவலை இல்லை என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகனும், அந்த தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.

தேனி தொகுதியில்...

தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஓ.பன்னீர் செல்வம் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தேனி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பில் உள்ள குலதெய்வமான பேச்சியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு தரிசனம் முடிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தேனி தொகுதியில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்:- தேனி தொகுதியில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேனி மட்டுமல்ல 40 எம்.பி. தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்.
கேள்வி:- தங்கதமிழ்செல்வன் அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் உங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா?

பதில்:- என்னை எதிர்த்து டிடிவி தினகரனே நின்றாலும் எங்களுக்கு கவலையில்லை. அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் ப. ரவீந்திரநாத் குமார் நேற்று தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து