Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி நிதி ஒதுக்கீடு

திங்கட்கிழமை, 13 மே 2019      உலகம்
Image Unavailable

Source: provided

 வாஷிங்டன்  : பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து 1.5 பில்லியன் டாலர் தொகை மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு ஒதுக்க இருப்பதாக ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார்.   

மெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப வேண்டும் என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கனவு திட்டமாகும்.

இதற்காக நிதி ஒதுக்கும்படி நாடாளுமன்றத்தில் டிரம்ப் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிப்பட்டதை தொடர்ந்து, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதன் மூலம் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப தேவையான தொகையை ராணுவ நிதியில் இருந்து பெறமுடியும்.

இந்த நிலையில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து 1.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,500 கோடி) தொகை மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு ஒதுக்க இருப்பதாக ராணுவ மந்திரி பேட்ரிக் சனாஹன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை எவ்வித பாதிப்பும் இல்லாமல் மாற்றியமைத்து, அதில் இருந்து 1.5 பில்லியன் டாலரை மெக்சிகோ எல்லையில் 120 மைல் தூரத்துக்கு சுவர் எழுப்புவதற்காக ஒதுக்கியுள்ளோம்” என தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து