Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து - 17 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

சேலம் : மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்தது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் தமிழக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 17 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 116.93 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மேலும் உயர்ந்து 117.2 அடியாக உயர்ந்தது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் 3 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் தேவைப்படுவதால் இன்னும் ஒருவாரத்தில் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கல் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழக காவிரியில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து