எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு : நான் எந்த தவறும் செய்யாத காரணத்தால், என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் பெங்களூருவில் ஒக்கலிகர் சமுதாயத்தினர் பேரணி மற்றும் போராட்டம் நடத்தி உள்ளனர். இந்த பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. சென்னப்பட்டணாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்கனவே நான் வருவதாக கூறி இருந்ததால், அந்த போராட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது. அப்படி இருந்தும் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் பேரணி மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்திற்கு முதலாவதாக எனக்கு அழைப்பு விடுத்திருந்தால், கண்டிப்பாக கலந்து கொண்டு இருப்பேன். டி.கே.சிவக்குமார் கைது விவகாரம் அரசியல் உள்நோக்கத்துடன் நடந்ததாகும். பா.ஜ.க.வினர் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகின்றனர். டி.கே.சிவக்குமாருக்கு அடுத்து நான் கைது செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் சொல்கிறார்கள். என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. என்னை வழக்குகளில் சிக்க வைத்து விடலாம் என்று நினைக்கின்றனர். எந்த வழக்கிலும் சிக்க மாட்டேன். ஏனெனில் நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நான் யாருக்காகவும், எதற்காகவும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு குமாரசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


