எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : விராட் கோலி அல்லது ரோகித் சர்மா ஆகியோரின் பங்களிப்பை போன்று தவானின் பங்களிப்பும் அணிக்கு மிகமிக முக்கியமானது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக தவான் விளையாடி வருகிறார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய நிலையில், காயத்தால் துரதிருஷ்டவசமாக வெளியேறினார்.
அதன் பின் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவை தொடரை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா அல்லது விராட் கோலியைத்தான் முன்னிலைப்படுத்துகிறார்கள். ஆனால் தவானின் பங்களிப்பும் இந்திய அணிக்கு மிகமிக முக்கியமானது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், தவான் மற்றும் ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன்கள். சிறந்த தொடக்க வீரர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். ரோகித் சர்மா அல்லது விராட் கோலியை போன்று தவானின் பங்களிப்பும் மிக மிக முக்கியமானது. டி20 அல்லது 50 ஓவர் கிரிக்கெட் எதுவாக இருந்தாலும், ஷிகர் தவான் சிறந்த வீரர். என்னைப் பொறுத்த வரைக்கும் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்க தவானைவிட சிறந்த வீரர் யாரும் இல்லை. அவரது உடற்தகுதியில் கவனம் செலுத்தினால் இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் அவரை யாரும் அசைக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


