முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மை மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. உள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

நெல்லை : சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. அரசு செயல்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்த கிறிஸ்துவ அமைப்பினர் மற்றும் போதகர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்பினர் முன்னிலையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிறிஸ்தவ மக்கள் நேசிக்கும் இயக்கம் அ.தி.மு.க. என்றார். இந்திய அளவில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழகம் என்றும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

முன்னதாக நாங்குநேரி தொகுதியில் நேற்று முன்தினம் தனது பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது நாங்குநேரி தொகுதி இடைதேர்தல் திணிக்கப்பட்ட ஒரு தேர்தல் என்று குறிப்பிட்ட முதல்வர், காங்கிரசின் சுய நலத்தால்தான் இந்த தேர்தல் நடக்கிறது என்று குறிப்பிட்டார். நேற்றும் அவர் நாங்குநேரி தொகுதியில் 2-வது நாளாக தனது பிரச்சாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து