எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பதாக, அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் அணு விஞ்ஞானி ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 88-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு தலைவர்களும் அப்துல் கலாம் பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்தி புகழாரம் சூட்டினர். கலாம் நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். கலாம் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-
21 ஆம் நூற்றாண்டில் நவீன மற்றும் வலுவான இந்தியாவை உருவாக்கும் சிந்தனையை கலாம் கொண்டிருந்தார், அதை அடைய அவரது முழு வாழ்க்கையையும் நாட்டிற்காக அர்ப்பணித்தார். அவரது முன்மாதிரியான வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகம் அளிக்கிறது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு இந்திய நாடு வணக்கம் செலுத்துகிறது. இவ்வாறு அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை உலக மாணவர்கள் தினமாக கடந்த 2010-ம் ஆண்டு ஐ.நா சபை அறிவித்தது. கடந்த 2005 ஆண்டு மே மாதம் 26-ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டிற்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அப்துல் கலாம் சென்றார். அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் காலடி எடுத்து வைத்த அந்த நாளை தேசிய அறிவியல் தினமாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்து கலாமிற்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


