ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      விளையாட்டு
SPORTS-1 2019 11 13

Source: provided

ஹாங்காங் : ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து வெற்றி பெற்று 2 - வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஹாங்காங்கில் நடந்து வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, கொரியா நாட்டின் கிம் கா யூன் ஆகியோர் விளையாடினர். இதில் சமீப போட்டிகளில் முதல் சுற்றில் தவறுகள் செய்த சிந்து, இந்த போட்டியில் அவற்றை தவிர்த்து வெற்றி பெறும் நோக்குடன் விளையாடினார்.

36 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் கிம்மை வீழ்த்தி சிந்து 2-வது சுற்றுக்குள் நுழைந்து உள்ளார். அவர் தாய்லாந்து நாட்டின் பூசனன் ஓங்பாம்ரங்பானை எதிர்த்து அடுத்த போட்டியில் விளையாடுகிறார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து