முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது.

டிசம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 11 ரூபாய் குறைந்து 3,591 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல, 28,816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று  28,728 ரூபாயாகக் குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு 88 ரூபாய் விலை குறைந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று அதன் விலை ரூ.3,771 ஆக இருந்தது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று முன்தினம் 30,256 ரூபாயிலிருந்து நேற்று 30,168 ரூபாயாகச் சரிந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 88 ரூபாய் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை நேற்று சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 46.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.47,000 ஆக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து