முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் டெண்டுல்கரால் தேடப்பட்ட நபர் சென்னை பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத் என தெரியவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  டெண்டுல்கர். தனது பேட்டிங் திறமையால் இந்தியா மட்டுமல்லாது உலகம்  முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். சச்சின் போன்ற பிரபலங்களை டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக  வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் அதிகம்.  அவர்கள் பதிவிடும் தகவல்களை, செய்திகளை லைக் செய்வதும் இணையவாசிகளின் வாடிக்கையாக இருந்து வருகிறது.  அவ்வகையில் டெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்ட குறுந்தகவல் ஒன்றை இணையவாசிகள் வைரல்  ஆக்கியுள்ளனர்.

எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான நான்  ஒருமுறை சென்னை வந்த போது நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டல் பணியாளர் ஒருவரை சந்தித்தேன். கிரிக்கெட் ஆட்டத்தின்போது முழங்கைகளில் அணியும் பாதுகாப்பு பட்டை (எல்போ பேட்) குறித்து அந்த ஓட்டலின் ஊழியர் அப்போது  எனக்கு ஆலோசனை கூறினார். அவர் கூறிய பின்னர் உடனடியாக பட்டையின் வடிவத்தை மாற்றினேன். அவரை மீண்டும் சந்திக்க ஆசைப்படுகிறேன். அவரை கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்  என டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

2001-ம் ஆண்டு இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்த போது டெண்டுல்கர் நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் தங்கியிருந்த போது அவருக்கு காபி பரிமாற வந்த ஓட்டல் பணியாளர்  அளித்த ஆலோசனை மிகப் பெரிய பலனை அளித்தது. 2001-ம் ஆண்டு மார்ச் 18 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அந்தப் போட்டித் தொடரில் முதல் இன்னிங்சில் சதம் அடித்திருந்த சச்சின் 126 ரன்களை குவித்து இந்திய அணி 501 ரன்களுடன் வெற்றிவாகை சூடுவதற்கு களம் அமைத்து தந்தார். மேலும், ஆஸ்திரேலியாவுடனான அந்த போட்டித் தொடரை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில், சச்சின் சந்திக்க விரும்பிய நபர் சென்னை பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத் என்று தற்போது தெரியவந்துள்ளது. சச்சினுக்கு அன்று நான் ஆலோசனை கூறிய சம்பவம் எனது வாழ்நாளில் மறக்க முடியாத அற்புதமான தருணமாகும். என்னை அவர் சந்திக்க விரும்புவதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் குருபிரசாத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து