Idhayam Matrimony

மியான்மர் தலைவருடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு - பல ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

மியான்மர் : உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாக சீனா - மியான்மர் நாடுகளிடையே ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங், மியான்மருக்கு அரசியல் ரீதியாக இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் சீனா - மியான்மர் இடையே மியான்மரின் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த ஒப்பந்தங்களில் பொருளாதாரம் மற்றும் ரயில் பாதை இணைப்புகள் ஆகியவையும் அடங்கும். ஆனால், சீன அதிபர் ஜி ஜின்பிங், மற்றும் மியான்மர் தலைவர் சூச்சியுடனான சந்திப்பில் புதிய ஒப்பந்தம் ஏதும் இல்லை. 19 வருடங்களுக்கு பிறகு சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் விமர்சனத்துக்கு உள்ளான போது அந்நாட்டுக்கு சீனா ஆதரவாக இருந்தது. இந்நிலையில் பிராந்தியத்தில் தனது வலிமையைச் சேர்க்கும் வகையில் தனது நட்புக் கூட்டணியில் மியான்மரையும் இணைக்கும் பணியில் சீனா தீவிரமாக இறங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து