எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேப்டவுன் : U - 19 உலக கோப்பை அரைஇறுதி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ஜெய்ஸ்வால் க்கு முன்னாள் பாக். வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
U - 19 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 172 ரன்னில் சுருண்டது. அதன்பின் இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் விக்கெட் இழக்காமல் சேஸிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர். இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். ஜெய்ஸ்வால் ஏற்கனவே மும்பை அணிக்காக இரட்டை சதம் விளாசியுள்ளார். பானி பூரி விற்றுக் கொண்டே கிரிக்கெட்டில் சிறந்த வீரராக வளர்ந்து வந்துள்ள அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜெய்ஸ்வால் குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதி போட்டி குறித்தும் சோயிப் அக்தர் கூறுகையில், அரையிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சிறப்பான முயற்சி, ஆனால் இறுதி போட்டிக்கு முன்னேறும் வகையில் அதுபோதுமானது அல்ல. பாகிஸ்தான் இளைஞர்களின் பீல்டிங் பரிதாபகரமானதாக இருந்தது. இருந்தாலும் அவர் 19 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தாலும், பீல்டிங் செய்யும்போது டைவ் அடிக்க முடியாதா?. பாகிஸ்தான் இளையோர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதியானவர்கள் அல்ல. அதேவேளையில் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் சொல்லியாக வேண்டும். அவர்கள் போட்டியை முழுமையாக வென்றார்கள். பாராட்டுவதற்கு தகுதியானது இந்திய அணி. வருங்காலத்தில் சில வீரர்கள் இந்திய தேசிய அணியில் இடம் பெறுவார்கள் என்பதை உறுதியாக கூறலாம். இந்தியாவின் எதிர்காலம் சரியான கைகளில் உள்ளது என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ஸ்வால் கிரிக்கெட் விளையாடுவதற்காக கிராமத்தில் இருந்து மும்பைக்கு வந்து பால் பண்ணையில் தூங்கியுள்ளார். U - 19 கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். காலையில் பானி பூரி விற்றுள்ளார். அவருடன் விளையாடும் சக வீரர்களுக்கு இவரே அதை பரிமாறியுள்ளார்.
சதாரணமான சிறுவனாக இருந்த அவர், எப்படி தனது இடத்திற்காக போராடியிருப்பார் என்பது குறித்து நாம் கற்பனை செய்து பார்க்கலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 2 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. அவர் ஏதாவது ஒரு அணிக்கு செல்ல இருக்கிறார் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அவருக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ளது. அவர் இந்திய சீனியர் அணியில் இடம் பிடிப்பார். இது உறுதி. அதேபோல் சக்சேனாவும் சிறப்பாக விளையாடினார். ஜெய்ஸ்வால் வாழ்க்கையில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் பாடம் கற்றுக் கொள்வது அவசியம். அவர் திறமைக்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார். தற்போது அவருக்கு பின்னால் பணம் ஒடிக் கொண்டிருக்கிறது’ என்றார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


