முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி பாலியல் வழக்கில் சிறையில் அடைப்பு

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைது செய்யப்பட்டு ரைக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார்.

பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன்( வயது 67) மீது நடிகை ஏஞ்சலினா ஜூலி உள்பட 80-க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் புகார் கூறினர்.

இதுபோல் நடிகை ரோஸ் மெக்கோவன், அன்ன பெல்லா உள்ளிட்ட மேலும் பல நடிகைகளும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து பாலியல் வழக்கில் அவரை மன்ஹாட்டன் நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வரும் வரையிலும் நீதிமன்றம் அருகிலுள்ள போர் சீசன்ஸ் ஓட்டலில் வழக்கறிஞர்களுடன் ஹார்வி விலையுயர்ந்த காபி அருந்திக் கொண்டிருந்தார். தீர்ப்பு வெளியானதும் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் கைவிலங்கிட்டு ரைக்கர்ஸ் தீவு சிறைக்கு அழைத்து சென்று அடைக்கப்பட்டார்.

வரும் 11 ஆம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் வரை, அந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பார். வழக்கில் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு குறித்து நடிகை ரோஸ் மெக்கோவன் கூறும் போது, இது ஒரு சிறந்த நாள் இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட வர்களுக்கு அவர்களின் குரல்கள் கேட்கப்படும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து