முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை - இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

லண்டன் : தமிழ்நாட்டு கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை, இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதை திருப்பி கொடுக்குமாறு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிலைகள் திருடு போவதும், அவை வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது கண்டறியப்பட்டு, மீட்கப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.இந்த வரிசையில், தமிழ்நாட்டில் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை, கடந்த 1957-ம் ஆண்டு திருடு போனது. இது, 15-ம் நூற்றாண்டு வெண்கல சிலை ஆகும். அதே போன்ற போலி சிலையை அந்த இடத்தில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், அந்த சிலை, இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஜே.ஆர்.பெல்மான்ட் என்ற கலெக்டரின் அபூர்வ பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்த சிலை, கடந்த 1967-ம் ஆண்டு, சூத்பி ஏல மையம் மூலமாக ஏலம் விடப்பட்டுள்ளது. அதை அஷ்மோலியன் அருங்காட்சியகம் ஏலத்தில் எடுத்துள்ளது.

இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம், தனியார் ஆராய்ச்சியாளர் ஒருவர், அந்த திருமங்கை ஆழ்வார் சிலை, தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்டது என்பதை கண்டுபிடித்து, அருங்காட்சியக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். உடனே, இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அருங்காட்சியக நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். கூடுதல் ஆதாரங்கள் இருந்தால் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து சிலை தடுப்பு பிரிவு போலீசாரின் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டு கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலைதான் அது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்தியா சார்பில் முறைப்படி வேண்டுகோள் விடுக்க ப்பட்டது. சிலையை ஒப்படைக்க அஷ்மோலியன் அருங்காட்சியகம் விருப்பம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தங்கள் பிரதிநிதியை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்து, மேலும் ஆய்வு செய்து உறுதிப்படுத்த விரும்புவதாக கூறியுள்ளது.அதை ஏற்றுக்கொண்ட இந்திய அதிகாரிகள், இந்த பணியை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தி உள்ளனர். இத்தகவலை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் (வர்த்தகம்) ராகுல் நந்த்கரே தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து